கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.6½ லட்சம்

கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.6½ லட்சம்
x
தினத்தந்தி 16 Jun 2017 2:00 AM IST (Updated: 15 Jun 2017 7:44 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 3 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 3 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை நாகர்கோவில் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் முன்னிலை வகித்தார். கோவில் ஆய்வாளர் முத்துராமலிங்கம், தலைமை எழுத்தர் ராமலிங்கம் மற்றும் கோவில் ஊழியர்கள், விசுவகர்ம உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள 16 உண்டியல்கள், சுந்தரராஜ பெருமாள் கோவில், மார்க்கெட் ரோடு முருகன் கோவில், தெப்பக்குளம் சிவசக்தி விநாயகர் கோவில் ஆகியவற்றில் தலா ஒரு உண்டியல் வீதம் மொத்தம் 19 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை எண்ணப்பட்டது.

இவற்றில் மொத்தம் ரூ.6 லட்சத்து 59 ஆயிரத்து 526 இருந்தது. மேலும், தங்கம் 31.9 கிராமும், வெள்ளி 157 கிராமும் இருந்தன.

Next Story