நெல்லையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
நெல்லையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு மனித சங்கிலி நேற்று நடைபெற்றது.
நெல்லை,

மனித சங்கிலி
ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12–ந் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை டவுனில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
டவுன் மேலரதவீதியில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.
மாணவர்களுக்கு பரிசு
நிகழ்ச்சியில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 4 குழந்தைகள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து, முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டு, தற்போது மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் இந்த மையத்தில் படித்து என்ஜினீயரிங் படிப்பை முடித்து சென்னையில் பணிபுரிந்து வரும் முத்துக்குமார் என்பவருக்கும் கலெக்டர் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சந்திரகுமார், தொழிலாளர் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் முருகேச பிள்ளை, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சகாயராஜ், கள அலுவலர்கள் ரவீந்திரன், விசுவநாதன் உள்பட பள்ளி மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story