துறைமுக சாலையில் வாகனம் மோதி மான் உயிரிழப்பு


துறைமுக சாலையில் வாகனம் மோதி மான் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 3:45 AM IST (Updated: 16 Jun 2017 12:06 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமம் கடலோரத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதி ஆகும்.

மீஞ்சூர்,

ஆனால் அங்கு காமராஜர் துறைமுகம் அமைக்கப்பட்டதால் அங்கிருந்த மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களில் புகுந்தன.

இந்நிலையில் நேற்று ஒரு மான் துறைமுக பகுதி சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காட்டூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் சென்னை வேளச்சேரி வனத்துறை அலுவலர்கள் அங்கு வந்து மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.


Next Story