கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்


கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே கெட்சிகட்டி கிராமத்தில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெட்சிகட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 60–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் வந்து முகாமிட்டுள்ளன. இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் கிராமத்தில் சுற்றித்திரியும் குரங்குகள் சும்மா இருப்பதில்லை. வீடுகளின் கூரைகளில் உள்ள ஓடுகளை சேதப்படுத்தி வருவதுடன், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தூக்கி செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இது தவிர வீட்டு காய்கறி தோட்டங்களை நாசம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

அட்டகாசம்

இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து விடுவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை கடித்து விடும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் குரங்குகளால் பீதி ஏற்பட்டுள்ளது. ஆகவே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story