18–ந்தேதி நடைபெறும் இந்திய ஆட்சிப்பணிக்கான முதல் நிலை தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம்


18–ந்தேதி நடைபெறும் இந்திய ஆட்சிப்பணிக்கான முதல் நிலை தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வருகிற 18–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய ஆட்சிப்பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது.

திருச்சி,

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வருகிற 18–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய ஆட்சிப்பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வினை 14 தேர்வு மையங்களில் உள்ள 16 அறைகளில், 5,663 தேர்வாளர்கள், தேர்வு எழுத உள்ளனர். தேர்வு பணிகளுக்கென 16 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 4 நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது.


Next Story