உதவி உபகரணங்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


உதவி உபகரணங்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

உதவி உபகரணங்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

மத்திய அரசின் ஜி.எஸ்.டி., மசோதாவில் பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெய்லி தட்டச்சு எந்திரங்கள், மாற்றுத்திறனாளி வாகனங்கள் ஆகியவற்றுக்கு 18 சதவீத வரியும், பிரெய்லி கடிகாரங்கள், பிரெய்லி காகிதங்கள், காதொலிக்கருவிகள் போன்றவற்றுக்கு 12 சதவீத வரியும், உடல் ஊனமுற்றோருக்கான ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கரசைக்கிள்கள், செயற்கை கால்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் மற்றும் மறுவாழ்வு உபகரணங்களுக்கு 5 சதவீத வரியும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால்நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்க குமரி மாவட்ட பொருளாளர் சார்லஸ் தலைமை தாங்கினார். செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தார். இதில் அருட்பணியாளர் சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story