விக்கிரமசிங்கபுரத்தில் பரிதாபம் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி


விக்கிரமசிங்கபுரத்தில் பரிதாபம் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 17 Jun 2017 2:30 AM IST (Updated: 16 Jun 2017 5:30 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பன்றி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு விஜய பகவதி (வயது 6) என்ற சிறுவனும், ஒரு வயதில் பிரியதர்சினி என்ற குழந்தையும் உள்ளனர்.

விஜய பகவதி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். இந்த ஆண்டு தான் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளான். மூன்று நாட்களே பள்ளிக்கூடம் சென்றுள்ளான். பின்னர் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாக வில்லை.

சாவு

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவனை, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவில் விஜய பகவதி பரிதாபமாக இறந்தான். சிறுவன் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது. மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் இறந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் இதே போல் விக்கிரமசிங்கபுரம் ஜார்ஜ்புரத்தில் 7 வயது சிறுமி தரணி, மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story