22–ந்தேதி தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான செய்முறை தேர்வு


22–ந்தேதி தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான செய்முறை தேர்வு
x
தினத்தந்தி 17 Jun 2017 1:30 AM IST (Updated: 16 Jun 2017 5:49 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகிற 22–ந்தேதி தொடங்குகிறது என்று அரசு தேர்வுகள் துறை மண்டல துணை இயக்குனர் தேவவரம் இனியவேந்தன் தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகிற 22–ந்தேதி தொடங்குகிறது என்று அரசு தேர்வுகள் துறை மண்டல துணை இயக்குனர் தேவவரம் இனியவேந்தன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு

பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த தனிதேர்வர்களும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும்.

மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

 செய்முறை தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வராதவர்களும், செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாத மாணவ–மாணவிகளுக்கும் சிறப்பு துணை தேர்வுக்கான செய்முறை தேர்வு வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த செய்முறை தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளுமாறு மாணவ–மாணவிகளை கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து மாணவ–மாணவிகளின் வீட்டு முகவரிக்கு எந்த தகவலும் அனுப்பப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story