பாவூர்சத்திரத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரத்தில், கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரத்தில், கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர்
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி வள்ளிமயில். இவர்களுக்கு நாகராஜன் (வயது 19) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் நாகராஜன் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் நாகராஜன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். வந்ததும் தனது அறைக்கு சென்று உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அவரது தாயார் மகன் இருந்த அறைக்கதவை தட்டிப் பார்த்துள்ளார். நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதையடுத்து அங்குள்ள ஜன்னலை திறந்து பார்த்தபோது, நாகராஜன் தூக்கில் தொங்குவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளிமயில் மற்றும் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று நாகராஜனை மீட்டனர். பின்னர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள், நாகராஜனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story