எட்டயபுரம் அருகே கண்மாய் தூர்வாரும் பணி உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்
எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேல கண்மாய் உள்ளது.
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேல கண்மாய் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. உதவி கலெக்டர் அனிதா தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், விவசாயிகள் உரிய ஆவணங்களை எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்து, கண்மாயில் உள்ள கரம்பை மண்ணை எடுத்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தாலுகா அலுவலகத்தில் அனுமதி பெற்ற விவசாயிகள் ஆர்வத்துடன் கண்மாயில் இருந்து கரம்பை மண்ணை அள்ளிச் சென்றனர். தாசில்தார் சூரியகலா, துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன், கிராம நிர்வாக உதவியாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story