பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கியபோது பாம்பு கடித்து சிறுவன் சாவு


பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கியபோது பாம்பு கடித்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 17 Jun 2017 4:15 AM IST (Updated: 17 Jun 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை கீழ்கொண்டையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் கவுதம்(வயது 9).

ஆவடி,

 இவன், திருநின்றவூரை அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்றுமுன்தினம் இரவு கவுதம் தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தான். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த வி‌ஷபாம்பு, சிறுவன் கவுதமை கடித்து விட்டது. வலியால் அலறி துடித்த அவனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் கவுதம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி முத்தாபுதுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story