“குறிப்பிடும்படியான தலைமை இல்லாததால் அ.தி.மு.க.வில் அதிகார போட்டி நிலவுகிறது”
குறிப்பிடும்படியான தலைமை இல்லாததால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் அதி காரத்தை கைப் பற்றுவதில் போட்டி நிலவி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஜெயங் கொண்டம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்றது. கூட் டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் ஜெயங்கொண்டம் இலக்கிய தாசன், அரியலூர் மருத வாணன், குன்னம் செல்வமணி, மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் அதிகார போட்டி
தமிழக சட்டசபையில் நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிப்பதாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக் கையை அரசு செவிசாய்த்து விவாதிக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி தலைமை இழந்த ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிகார போட்டி அ.தி.மு.க. வில் நிலவுகிறது.
கலைஞரின் வைரவிழாவில் காங்கிரஸ், இடது சாரி மற்றும் மத சார்பற்ற அனைத்து கட்சிகள் மற்றும் முதல்வர்கள் ஒன்று சேர்ந்து இருப்பது வரவேற்கத்தக்கது.
ஜனாதிபதி வேட்பாளரை...
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க காங் கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் பாரதீய ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாரதீய ஜனதா கட்சி அல்லாத வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரி உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரியலூர், திரு மானூர், செந்துறை, ஆண்டி மடம், தா.பழூர், மீன்சுருட்டி, இரும்புலிக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளிலுள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தொண் டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story