‘தாவூத் இப்ராகிமை அழைத்து வந்து தண்டியுங்கள்’ தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தல்


‘தாவூத் இப்ராகிமை அழைத்து வந்து தண்டியுங்கள்’ தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:34 AM IST (Updated: 17 Jun 2017 4:33 AM IST)
t-max-icont-min-icon

‘‘தாவூத் இப்ராகிமை இந்தியா அழைத்து வந்து தண்டித்தால் தான், நீதி நிலைநாட்டப்படும்’’ என்று மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.

மும்பை

‘‘தாவூத் இப்ராகிமை இந்தியா அழைத்து வந்து தண்டித்தால் தான், நீதி நிலைநாட்டப்படும்’’ என்று மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.

தாவூத் இப்ராகிம்

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தாதா அபுசலீம் உள்ளிட்ட 6 பேரை குற்றவாளிகள் என்று தடா கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு குறித்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஒர்லியை சேர்ந்த கமலா மால்கனி என்பவர் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பில் எனக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை. முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம் இந்தியாவில் விசாரணையை எதிர்கொண்டு தண்டனை பெற்றால் மட்டுமே முழுமையான, இறுதியான நீதி நிலைநாட்டப்படும்’’ என்றார்.

தாமதமான தீர்ப்பு

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தன்னுடைய தாயாரை பறிகொடுத்த பிரீத்தி தேஷ்முக் கூறும்போது, ‘‘24 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இது மிகவும் கால தாமதமான தீர்ப்பு. ஆனால், சாதகமானது. இருப்பினும், தாவூத் இப்ராகிம் தன்னுடைய தவறுகளுக்கு சங்கு சத்தத்தை கேட்டால் மட்டுமே இந்த தீர்ப்பு இறுதி முடிவை எட்டும்’’ என்றார்.

சரியான பாதையில்...

இந்த தீர்ப்பின் மூலம் வழக்கு சரியான பாதையில் பயணிப்பதாக தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் விலா எலும்பு பாதிக்கப்பட்ட கிரீத்தி அஜ்மீரா தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தன்னுடைய வலது காலை இழந்த நரேஷ் சராப் கூறுகையில், ‘‘நீதித்துறையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், நீதி கால தாமதமாகி இருக்கிறது என்பது உண்மை. சம்பவம் நடந்து இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வெளியாகி இருந்தால், நல்லது’’ என்றார்.


Next Story