வேலூரில் போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூரில் போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வேலூரில் போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாதனூர் மது அடிமைகள் மறுவாழ்வு மையம், மாவட்ட கலால் பிரிவு மற்றும் காவல்துறை சார்பில் நேற்று போதை பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ– மாணவிகளுடன் அவரும் நடந்து சென்றார்.
ஊர்வலத்தில் சென்ற மாணவ– மாணவிகள் மது உடலை கெடுக்கும், பான் மசாலா புற்றுநோயை உருவாக்கும், போதை மருந்துகள் உயிரை குடிக்கும், கஞ்சா பைத்தியமாக்கும் என்ற போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், உதவி கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் பழனி, மாதனூர் மது அடிமைகள் மறுவாழ்வு மைய செயலாளர் டாக்டர் வெங்கடாத்திரி, செஞ்சிலுவை சங்க செயலாளர் இந்தர்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சென்று கோட்டை முன்பு முடிவடைந்தது.
Related Tags :
Next Story