நாளை மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விஷம் குடித்து தற்கொலை
நாளை மறுநாள்(3–ந் தேதி) திருமணம் நடைபெற இருந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் அருகே மணமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம்,
நாளை மறுநாள்(3–ந் தேதி) திருமணம் நடைபெற இருந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் அருகே மணமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாளை மறுநாள் திருமணம்நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூரை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மனைவி மேரி பாத்திமா. இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 4 பேருக்கு திருமணம் முடிந்து விட்டது. கடைசி மகன் பிரின்ஸ்(வயது 35), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இந்த திருமணம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இரு வீட்டார் சார்பிலும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
விஷம் குடித்து தற்கொலைஇதற்கிடையே திருமண செலவுகளுக்காக பிரின்ஸ், தான் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்து தனியார் நிறுவனம் ஒன்றில் கடன் கேட்டிருந்தாராம். ஆனால் அந்த நிறுவனம், திருமணத்துக்கு பின்னர் தான் பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் பிரின்ஸ் மனம் உடைந்து காணப்பட்டாராம். இதனை அறிந்து அவரது பெற்றோர் மகனை சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 28–ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற பிரின்ஸ், வீட்டின் அருகே தோட்டத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
அதை பார்த்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பிரின்ஸ் பரிதாபமாக இறந்தார்.
அதிர்ச்சி–சோகம்இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.