ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் விண்ணப்பிக்க 15–ந் தேதி கடைசிநாள்

ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் விண்ணப்பிக்க 15–ந் தேதி கடைசிநாள்
x
தினத்தந்தி 1 July 2017 2:00 AM IST (Updated: 30 Jun 2017 9:12 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட சமூக நலத்துறை மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை பெண்களுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்ட சமூக நலத்துறை மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை பெண்களுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது.

இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் உள்ளது என தாசில்தார் சான்றிதழ், இருப்பிட சான்று, தையல் பயிற்சி சான்று, வயது சான்று, சாதி சான்று, பாஸ்போர்ட் அளவுள்ள 2 வண்ண புகைப்படங்கள், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் என்பதற்கான சான்று நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை வருகிற 15–ந் தேதிக்குள் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Next Story