தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு 3 ஆயிரத்து 715 பேர் எழுதுகின்றனர்


தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு 3 ஆயிரத்து 715 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 1 July 2017 1:30 AM IST (Updated: 30 Jun 2017 9:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை 3 ஆயிரத்து 715 பேர் எழுதுகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை 3 ஆயிரத்து 715 பேர் எழுதுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஆசிரியர் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி எழுத்து தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 3 ஆயிரத்து 715 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 10 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

விண்ணப்பதாரர்கள் காலை 8–30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு அறைக்குள் நுழைவுச்சீட்டு, நீலம் அல்லது கருப்பு பந்துமுனை பேனா மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு நடைபெறும்போது, தேர்வர்கள் வெளியில் செல்ல அனுமதி இல்லை.

நிரந்தர தடை

தேர்வு முடிந்ததும் விடைத்தாளின் பிரதியை தேர்வர்கள் பெற்றுச் செல்ல வேண்டும். அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எதுவும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதி இல்லை. செல்போன், மடிக்கணினி, கால்குலேட்டர் போன்றவை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. இந்த அறிவுரைகளை பின்பற்றாத தேர்வர்கள் அன்றைய தேர்வை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன், போலீஸ் மூலம் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இந்த தேர்வு பணியில் ஈடுபடும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா மற்றும் தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story