காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனுமதிக்காது


காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனுமதிக்காது
x
தினத்தந்தி 1 July 2017 4:30 AM IST (Updated: 30 Jun 2017 11:29 PM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனுமதிக்காது என்று முத்தரசன் தெரிவித்தார்.

சீர்காழி,

சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பிரசார பேரியக்க அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் சீர்காழி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சிவராமன் (கொள்ளிடம்), என்.கிருஷ்ணமூர்த்தி (மயிலாடுதுறை), எஸ்.கிருஷ்ணமூர்த்தி (செம்பனார்கோவில்), அறிவழகன் (குத்தாலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி ஒன்றிய துணை செயலாளர் செல்வராசு வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பத்மாவதி, சிவபுண்ணியம், மாவட்ட செயலாளர் செல்வராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலப்பட பாலை தடை செய்வதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பேட்டி கொடுத்து சுயவிளம்பரம் செய்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிபடி வாக்களித்தால் மீராகுமார் வெற்றி பெறுவார். காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. இந்த திட்டங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி உடனே கைவிட வேண்டும். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சியால் எந்த பயனும் இல்லை. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை என்ற உத்தரவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் வீரராஜ், கஜேந்திரன், சுந்தரய்யா, வரதராஜன், நீதிசோழன், பாஸ்கரன், பிரபாகரன், இளமதியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சீர்காழி நகர செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.


Next Story