திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம், தினமும் ரூ.3 கோடி துணி உற்பத்தி பாதிப்பு
எலச்சிபாளையம்,
விசைத்தறி துணிகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் தினமும் ரூ.3 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் காடா துணிகள், வேட்டி ரகங்கள், அரசின் இலவச வேட்டி-சேலைகள், லுங்கி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விசைத்தறி துணிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 5 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், நூல், வார்ப்பிங், சைசிங், நெசவு மற்றும் துணி என பன்முகத்தன்மையுடன் விதிக்கப்பட்டு உள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒரு முக வரியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டபடி நேற்று முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தம் 3 நாட்கள் நடைபெறுகிறது.
வேலைநிறுத்தம் காரணமாக திருச்செங்கோடு சூரியம்பாளையம், சட்டையம்புதூர், குமரமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களில் விசைத்தறிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையே குமரமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே சிறு விசைத்தறி உரிமையாளர்கள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
விவசாயம் பொய்த்து போனதால் பல மாவட்டங்களில் இருந்து மாற்று தொழில் தேடி திருச்செங்கோட்டுக்கு ஏராளமானோர் வந்து உள்ளனர். அவர்கள் விசைத்தறியை நம்பி உள்ளனர். இந்தநிலையில் ஜி.எஸ்.டி. வரியால் தொழில் முடங்கி போனதால் தாங்கள் வேறு என்ன தொழில் செய்து பிழைப்பு நடத்த முடியும்? என கேட்கிறார்கள்.
மேலும் ஜி.எஸ்.டி. வரி பன்முகத்தன்மையுடன் இருப்பதால் தங்கள் தொழில் நசிந்து போகும். எனவே விசைத்தறி துணிக்கு ஒருமுக வரி விதிக்க வேண்டும், என்று விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story