மத்திய மந்திரிகளுடன் நாராயணசாமி சந்திப்பு
டெல்லியில் மத்திய மந்திரிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்.
விவசாயம் மற்றும் மீன்வளத்துறை மந்திரி ராதாமோகன்சிங்கை சந்தித்து பேசும்போது, புதுவை மாநிலத்துக்கு வறட்சி நிவாரணத்தை வழங்கவேண்டும், மீனவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக, காரைக்கால் மீனவர்களை மீட்க வேண்டும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பெண் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் உடனிருந்தார்.