விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க குமாரசாமியை முதல்–மந்திரியாக்க வேண்டும்


விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க குமாரசாமியை முதல்–மந்திரியாக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2017 3:14 AM IST (Updated: 2 July 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:–

பெங்களூரு,

தாவணகெரேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:–

கர்நாடகத்தை பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. இதனால் தான் காவிரி, மகதாயி போன்ற நதி நீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கட்சிகள் தீவிரம் காட்டுவது இல்லை. தேசிய கட்சிகளால் கர்நாடகத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. விவசாயிகள் மீதும் அந்த கட்சிகளுக்கு அக்கறை இல்லை. மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் விவசாயிகள் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தார்கள். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா அரசு கர்நாடகத்திற்கு குறைந்த அளவே வறட்சி நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது.

குமாரசாமி முதல்–மந்திரியாக இருந்த 2 ஆண்டுகளில் மாநிலத்திற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார். அதுபோல, விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால், குமாரசாமியை மாநில மக்கள் முதல்–மந்திரியாக்க வேண்டும். மாநில கட்சியான ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மாநில மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story