பெங்களூருவில் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் ஆதரவு திரட்டினார்
ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் நேற்று பெங்களூரு வந்தார். இங்கு அவர் கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டினார்.
பெங்களூரு,
இந்திய ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் (ஜூலை) நிறை வடைகிறது.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க. சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர் ஜெகஜீவன்ராமின் மகள் ஆவார். காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தனது பிரசாரத்தை குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கினார்.
ஜனாதிபதி தேர்தலில் எதிரும் புதிருமாக மோதும் ராம்நாத் கோவிந்த், மீராகுமார் ஆகிய 2 பேரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நேற்று பெங்களூரு வந்தார். பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மீராகுமார் கலந்து கொண்டார். அவருக்கு கர்நாடக பாரம்பரிய முறைப்படி மைசூரு தலைப்பாகை அணிவித்து முதல்-மந்திரி சித்தராமையா வரவேற்றார். நிகழ்ச்சியில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஆதரவு கேட்டு மீராகுமார் பேசினார்.
பின்னர் மீராகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலே, ஜனாதிபதி தேர்தலில் உங்களை களம் இறக்கி இருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி உங்களை பலிகடா ஆக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து மீராகுமார் கூறியதாவது:-
“கொள்கைக்காக போராடுவதும் அதற்காக மனசாட்சியின்படி செயல்படும்படி வேண்டுகோள் விடுப்பதும் எப்படி பலிகடா ஆக்கப்படுவதாகும்? இது நாட்டு மக்களின் புனிதமான கொள்கை கோட்பாடுகளுக்கான போராட்டம். நான் செல்கின்ற இடங்களில் உங்களுக்கு போதுமான எண்ணிக்கையில் ஆதரவு இல்லையே என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் முடிவையே அறிவித்து விடலாமே? ஏன் தேர்தலை நடத்த வேண்டும். நாட்டு மக்களுக்கான புனிதமான கொள்கை கோட்பாடுகளை நான் முன்னெடுத்து செல்கிறேன். யாராவது ஒருவர் இதனை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதனை நான் செய்கிறேன்.
நான் தேர்தலில் இருந்து விலகிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?. நான் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறேன். அவ்வளவுதான். இந்த தேர்தல் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடையேயான போட்டியாக சொல்லப்படுகிறது. இது வெட்கக்கேடானது. இந்த மனநிலையில் இருந்து நாம் முதலில் வெளியே வரவேண்டும். உயர்ந்த தகுதி படைத்தவர்கள்கூட சாதி பற்றி பேசுகிறார்கள். இதற்கு முன் உயர்சாதியை சேர்ந்தவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது சாதிபற்றி யாரும் பேசவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் எந்த சாதி என்றுகூட யாருக்கும் தெரியாமல் இருந்தது.
எனக்கும் கோவிந்துக்கும் இடையேயான இந்த போட்டியில் மட்டும் சாதிபற்றி அதிகம் பேசப்படுகிறது. நாம் எங்கே சென்று கொண்டு இருக்கிறோம். நமது சிந்தனைகள் நல்லவைகளாக மாறவேண்டும். பிறமதத்தவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் இருப்பது காந்தியின் கொள்கை அல்ல. பிறமதத்தினரை மதிக்க வேண்டும் அதுதான் காந்தியின் கொள்கை. அதைத்தான் நாங்கள் முன்னெடுத்து செல் கிறோம்.”
இவ்வாறு மீராகுமார் கூறினார்.

Related Tags :
Next Story