சரக்கு, சேவை வரியை குறைக்க நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி பேட்டி


சரக்கு, சேவை வரியை குறைக்க நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு, சேவை வரியால் தமிழக வியாபாரிகளுக்கு ஏற்படும் குறைகள் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

காஞ்சீபுரம்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்சீபுரம் வழியாக ஆரணியில் நடைபெறும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றார். அதையொட்டி காஞ்சீபுரம் நகர எல்லையான பொன்னேரிக்கரையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் வரவேற்றனர்.வரியை குறைக்க நடவடிக்கை

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சரக்கு, சேவை வரியால் தமிழக வியாபாரிகளுக்கு ஏற்படும் குறைகள் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டப்படும். வரியை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் ஆரணிக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story