ஜவுளிக்கடையில் தீ விபத்து ரூ.6 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மண்ணச்சநல்லூரில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் திருநகர் 3-வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவர் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் ஜவுளிக்கடையும், நகை அடகுக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடையிலிருந்து புகை வந்தது.
இதை கவனித்த அருகில் இருந்தவர்கள் கடை மேலாளர் துரைராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துரைராஜ் ஜவுளி கடைக்கு விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தார். அப்போது ஜவுளிக்கடையின் அலங்கார மேற்கூரை மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஜவுளிக்கடையில் இருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மற்றும் ஜவுளி ரகங்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர், கண்காணிப்பு கேமரா, மின்விசிறிகள் என பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜவுளிக் கடையின் மேற்கூரையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story