கதிராமங்கலம் மக்களின் குறைகளை தீர்க்கவில்லையெனில் அனைத்து கட்சி சார்பில் 10-ந் தேதி ஆர்ப்பாட்டம்
கதிராமங்கலம் மக்களின் குறைகளை தீர்க்கவில்லையெனில் அனைத்து கட்சி சார்பில் 10-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தஞ்சையில் பழ.நெடுமாறன் கூறினார்.
தஞ்சாவூர்,
கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் இருந்து எண்ணெய் கசிந்து வயல்கள் வீணாகி இருக்கின்றன. மக்கள் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் முழுவதும் கெட்டுவிட்டது. இதை எதிர்த்து போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி போலீசார் அடித்து விரட்டுகின்றனர். கதிராமங்கலத்தை போலீஸ்படை முற்றுகையிட்டுள்ளது. வெளியில் இருந்து யாரும் அந்த கிராமத்திற்குள் செல்ல முடியாதபடி எல்லோரையும் தடுத்து நிறுத்துகின்றனர். பேராசிரியர் ஜெயராமன் உள்பட பலரை கைது செய்து அவர்கள் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மணியரசன் உள்பட பலரை போலீசாரை கைது செய்தனர். கதிராமங்கலம் கிராமமக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை தடுத்து நிறுத்தப்படுகிறது. எந்த கட்சி தலைவரும் அங்கு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அது குறித்து அனைத்துகட்சிகளின் சார்பில் ஆலோசனை செய்யப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கதிராமங்கலம் கிராமத்தை முற்றுகையிட்டுள்ள போலீஸ்படையை உடனே திரும்ப பெற வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
அந்த கிராமமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அவற்றிற்கு தீர்வு காண மாவட்ட கலெக்டர் தவறிவிட்டார். இதனால் அமைச்சர்கள் நேரடியாக அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும். வருகிற 9-ந் தேதிக்குள் தமிழகஅரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் 10-ந் தேதி அனைத்துகட்சி மாநில தலைவர்களை அழைத்து கொண்டு கதிராமங்கலத்திற்கு நேரில் சென்று மாபெரும் போராட்டம் நடத்துவோம். காவிரி படுகை முழுவதும் இந்த போராட்டம் தொடரும். எனவே அதற்குள் எங்களது கோரிக்கைகளை தமிழகஅரசு நிறைவேற்ற வேண்டும்.
ஆயிரம் தொண்டர்களுடன் அனைத்து கட்சி தலைவர்கள் செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தால் அதன் விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள். கதிராமங்கலம், நெடுவாசல் என பல்வேறு பகுதிகளில் மக்களும், விவசாயிகளும் கட்சி வேறுபாடு இன்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. ஆனால் அடக்குமுறையை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தினால் மக்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு மக்களின் கருத்தை கேட்டு செயல்படுத்த வேண்டும். மீத்தேன் எரிவாயு திட்டம் உள்பட பல திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு குழுவை அமைத்தார்.
அந்த குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தும் அந்த தகவல்களை தமிழகஅரசு வெளியிடவில்லை. டெல்லியில் இருந்து உத்தரவு போட்டதும் தமிழகஅரசு அடங்கி போவதை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். தமிழக வளம் கொள்ளை போவதை அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தமிழகஅரசு ஏவிவிட்ட போலீசாரின் அடக்குமுறை குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, பேரழிப்புக்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story