குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்


குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 3 July 2017 4:00 AM IST (Updated: 3 July 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

நாகர்கோவில்,


குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் கண்ணாட்டுவிளை பாலையா, அசோகன் சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் யூசுப்கான், தனபால், காலபெருமாள், முருகேசன், அலெக்ஸ், தங்கம் நடேசன், ஏ.எம்.டி.செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் பேர் கண்தானம் செய்வது, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினவிழாவை முன்னிட்டு அவருடைய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, 100 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடத்துவது, ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தருவதாக வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்ததும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story