கிராம மக்கள் எதிர்ப்பு எதிரொலி பாகூர் பகுதியில் 2–வது நாளாக மதுக்கடைகள் அடைப்பு


கிராம மக்கள் எதிர்ப்பு எதிரொலி பாகூர் பகுதியில் 2–வது நாளாக மதுக்கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 3 July 2017 3:34 AM IST (Updated: 3 July 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலம் பாகூர் தொகுதிக்கு உட்பட்ட முள்ளோடை– பரிக்கல்பட்டு சாலை, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பத்தில் உள்ள மதுக்கடைகள், சாராய கடைகளை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகூர்,

இதையடுத்து பாகூர் தொகுதியில் புதிதாக மதுக்கடைகள், சாராய கடைகள் திறக்கக்கூடாது என்று அரசுக்கு தனவேலு எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். ஆனால் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டது.

இதை கண்டித்து நேற்று முன்தினம் பொது மக்களுடன் சேர்ந்து தனவேலு எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் உள்ள 2 சாராய கடைகளில் இருந்த சாராயத்தை பொதுமக்கள் கொட்டி அழித்தனர். மேலும் சாராய பாட்டில்களை உடைத்து சூறையாடினர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக பாகூர் பகுதியில் இருந்த மதுக்கடைகள் மற்றும் சாராய கடைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன.

இந்த நிலையில் 2–வது நாளாக நேற்றும் மதுக்கடைகள், சாராய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசுக்கு சொந்தமான அமுதசுரபி, பாசிக், பாப்ஸ்கோ ஆகிய நிறுவனங்களின் மதுக்கடைகளும் மூடியிருந்தன. இதனால் அரசுக்கு வருவாய் இழுப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி, சிலர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததை காணமுடிந்தது.



Next Story