வெர்சோவாவில் மாடல் அழகியின் பணப்பையை திருடியவர் கைது
மும்பையை சேர்ந்த மாடல் அழகி காயா சர்மா(வயது23). இவர் கடந்த மாதம் 29-ந்தேதி அன்று வெர்சோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நடிகை உபாசானா சிங்கின் பிறந்தநாள் விழாவில்
மும்பை,
நண்பர் ஒருவருடன் சென்று கலந்து கொண்டார். அப்போது திடீரென அவரது பணப்பை காணாமல் போனது. அதில் அவரது செல்போன், ரூ.20 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவை இருந்தன.
இதனால் காயா சர்மா மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் வெர்சோவா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கைது
மேலும் நடிகை உபாசானா சிங் பிறந்தநாள் கொண்டாடிய ஓட்டலில் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், நடிகையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டிருந்த தீபக் என்பவர் காயா சர்மா தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது மேஜையில் வைத்திருந்த அவரது பணப்பையை நைசாக எடுத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் தீபக்கை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த மாடல் அழகியின் பணப்பையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீபக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story