உணவு கழகத்தில் 127 பணிகள்


உணவு கழகத்தில் 127 பணிகள்
x
தினத்தந்தி 3 July 2017 7:45 PM IST (Updated: 3 July 2017 12:09 PM IST)
t-max-icont-min-icon

இந்திய உணவுக் கழகம், மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

உணவு தானிய வினியோகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இது. தற்போது இந்த நிறுவனத்தில், காவலாளி (வாட்ச்மேன்) பணிக்கு 127 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவுக்கு 79 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 34 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 13 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 1 இடமும் உள்ளது.

1-7-2017-ந் தேதியில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8-ம் வகுப்பு படித்தவர்கள், முன்னாள் படைவீரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு இந்த கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் முழுமையான விளம்பர அறிவிப்பை www.fciregionaljobs.con என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 15-7-2017-ந் தேதியாகும்.

Next Story