திருட்டு சி.டி.க்கள் விற்ற வாலிபர் கைது


திருட்டு சி.டி.க்கள் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 July 2017 3:45 AM IST (Updated: 4 July 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு சி.டி.க்கள் விற்ற வாலிபர் கைது

அரியலூர்,

அரியலூர் பஸ் நிலையத்தில் அனுமதியின்றி புதுப்பட சினிமா சி.டி.க்கள் விற்கப்படுவதாக அரியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அரியலூரில் உள்ள கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது ரமேஷ் (வயது25) என்பவரது பெட்டிக்கடையில் 3 புதிய சினிமா சி.டி.க்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்து, அவரிடமிருந்த 3 சி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர். 

Related Tags :
Next Story