தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் கண்டன ஊர்வலம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் நேற்று கண்டன ஊர்வலம் நடத்தினர்.
மண்டியா,
தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதேப் போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையிலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 2,088 கனஅடி வீதம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேப் போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கண்டன ஊர்வலம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனே தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று மண்டியா டவுனில் கர்நாடக விவசாய சங்கம் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்திற்கு விவசாய சங்கத் தலைவர் புட்டன்னய்யா தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது விவசாயிகள், தமிழகத்திற்கு உடனே தண்ணீரை நிறுத்த கோரியும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
இதற்கிடையே மண்டியாவில் உள்ள மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே மண்டியாவில் உள்ள நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேப் போல் கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் கார்டன் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story