ஹாஜி அலி தர்காவில் ஆக்கிரமிப்பை அகற்ற மராட்டிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதிக்கெடு

ஹாஜி அலி தர்காவை சுற்றியுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை 2 வாரத்துக்குள் அகற்றுமாறு மராட்டிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதிக்கெடு விதித்தது.
மும்பை,
மும்பை ஒர்லி கடல் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்காவுக்கு செல்லும் சாலையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் காணப்படுவதாகவும், இதனை அகற்ற உத்தரவிட கோரியும் சமூக சட்ட கல்வி மன்றம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றதும், ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றுவதாக தர்கா அறக்கட்டளை தெரிவித்தது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலவரையறைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இறுதிக்கெடு
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹாஜி அலி தர்கா அருகே 908 சதுர மீட்டர் சுற்றளவில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை 2 வாரத்துக்குள் அகற்றுமாறு மராட்டிய அரசுக்கு நீதிபதிகள் இறுதிக்கெடு விதித்தனர். மேலும், இந்த உத்தரவு பின்பற்றப்படும் விதத்தை கண்காணிக்குமாறு கொலபா துணை கலெக்டரை அறிவுறுத்திய நீதிபதிகள், தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Related Tags :
Next Story