கட்டண உயர்வை கண்டித்து மும்பை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் திடீர் உண்ணாவிரதம்


கட்டண உயர்வை கண்டித்து மும்பை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் திடீர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஐ.ஐ.டி.யில் பல்வேறு கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் திடீர் உண்ணாவிரதம் இருந்தனர்.

மும்பை,

பவாயில் உள்ள மும்பை ஐ.ஐ.டி.யில் கடந்த மே மாதம் முதல் மாணவர்களின் தங்கும் விடுதி கட்டணம் 300 சதவீதமும், உடற்பயிற்சி மைய கட்டணம் 167 சதவீதமும், தேர்வு கட்டணம் 100 சதவீதமும், பதிவு மற்றும் மருத்துவ கட்டணங்கள் 50 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உயர்த்தப்பட்ட மேற்படி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மாணவ, மாணவியர் பலர் கடந்த ஒரு வாரமாக வகுப்பு புறக்கணிப்பு செய்து வந்தனர்.

திடீர் உண்ணாவிரதம்

இந்த நிலையில், மாணவ, மாணவியர்களின் ஒரு குழுவினர் திடீரென ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஐ.ஐ.டி. வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி மாணவர்கள் கூறுகையில், “ ஐ.ஐ.டி. நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் தவறான உத்தரவாதங்களை தருகின்றனர். ஆனால் கட்டண உயர்வை திரும்ப பெறுவதாக உறுதி அளிக்க மறுக்கிறார்கள். நாளை (இன்று) முதல் மற்ற மாணவர்களும் எங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்கள் ” என்றனர். 

Next Story