ஆம்பூரில் ஆவின் டாக்டரின் கார் தீயில் கருகி நாசம்
ஆம்பூரில் உள்ள பெத்லகேம் பகுதி 9–வது தெருவை சேர்ந்தவர் வினுடேவிட் (வயது 49), வேலூர் ஆவின் பால் பண்ணையில் கால்நடை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது காருக்கு டீசல் நிரப்பிவிட்டு, அதனை வழக்கம்போல் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்தார்.
ஆம்பூர்,

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காரின் பின்புறம் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வினுடேவிட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் ஆம்பூர் தீயணைப்பு நிலையம், ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த பகுதி குறுகலான தெரு என்பதால் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. காரின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் ஆகும்.
இதுகுறித்து வினுடேவிட் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காருக்கு யாராவது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.