பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 5 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 11:47 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பீடித்தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பீடி சங்க மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் காசிநாதன் (சி.ஐ.டி.யு.), நாகேந்திரன், பீடி சங்க பொருளாளர் காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீடி சங்க துணை பொதுசெயலாளர் சரவணன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் ஒரே சீரான கூலியை அமல்படுத்த வேண்டும், 1,000 பீடி சுற்றுவதற்கு ரூ.300 கூலியாக நிர்ணயம் செய்ய வேண்டும். தரமான இலை, புகையிலை தேவையான அளவு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம், சேமநல நிதி ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பீடி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பீடி தயாரிக்க தேவையான புகையிலை உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும். 1 கோடி பீடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தசாமி, இனாயதுல்லா, ஆறுமுகம், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story