குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை


குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 5 July 2017 4:30 AM IST (Updated: 5 July 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த தாலுகா அளவி லான குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களி டம் உதவி கலெக்டர் தரையில் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது.

திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்கு னர் அரக்குமார் முன்னிலை வகித்தார்.

முற்றுகை

கூட்டத்தில் விவசாயிகள் உதவி கலெக்டரை முற்றுகை யிட்டு, பழையபடி தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டத்தை தாலுகா அலுவல கத்தில் நடத்த வேண்டும். விவசாயிகளின் பெரும்பான் மையான கோரிக்கைகள் வருவாய்த் துறையினரால் தான் தீர்க்க முடியும். வேளாண்மை அதிகாரிகள் சொன்னால் கிராம நிர்வாக அதிகாரி கூட எந்த வேலையும் செய்து தர மாட்டார்கள்.

தாலுகா அலுவலகத்தில் இருந்து வேளாண்மை துறைக்கு குறைதீர்வு நாள் கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. பின்னர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தையே ரத்து செய்து விடுவீர்கள் என்று பேசினர்.

அப்போது உதவி கலெக்டர், இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையில் சில விவசாயிகள் கறுப்பு துணியை வாயில் கட்டி கொண்டு தங்கள் எதிர்ப்பை காட்டி னர்.

தர்ணா போராட்டம்

இதையடுத்து விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் இருக்கையில் அமரும்படி கேட்டு கொண்டனர். பின்னர் உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி, தரையில் அமர்ந்து விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட் டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பில் தருவதில்லை

சரக்கு மற்றும் சேவை வரியினால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சில கடையில் பில் போட்டு தரப்படுவது இல்லை. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பித்து பல மாதங்களாகியும், தகுதி இருந்தும் சிலருக்கு முதியோர் உதவித்தொகையும், விதவை உதவித்தொகையும் கிடைக்க வில்லை. பசுமை வீடு திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு சோலார் மின்சக்தி கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் 3 அல்லது 4 மாதங்களிலேயே பழுதாகி விடுகிறது. விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இதுகுறித்து உயர் அதிகாரி களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் தெரிவித்தார். 

Related Tags :
Next Story