லாரி மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


லாரி மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 5 July 2017 4:15 AM IST (Updated: 5 July 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதியது. இந்த விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியானார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காஞ்சிகுடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 27). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். நேற்று இவரும், மன்னார்குடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனும் மோட்டார் சைக்கிளில் மன்னார்குடி அருகே உள்ள ருக்மணிகுளம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிரே கரூரில் இருந்து திருவாரூர் நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஊர்க்காவல் படைவீரர் சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மதுரை மாவட்டம் பறவை பகுதியை சேர்ந்த ராமசாமி (52) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story