ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பெங்களூரு வருகை இந்திய அறிவியல் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்
பெங்களூரு சி.வி.ராமன் ரோட்டில் இந்திய அறிவியல் கழகம் உள்ளது. இதன் பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
பெங்களூரு,
பெங்களூரு சி.வி.ராமன் ரோட்டில் இந்திய அறிவியல் கழகம் உள்ளது. இதன் பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) நடைபெற உள்ள இந்திய அறிவியல் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெங்களூரு வருகிறார். அவர் மதியம் 12.55 மணிக்கு விமானம் மூலம் எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு வந்து இறங்குகிறார்.
அவரை கவர்னர் வஜூபாய்வாலா, முதல்–மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் வரவேற்கிறார்கள். அதனைத்தொடர்ந்து, நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவை முடித்து கொண்டு மதியம் 2.55 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், பல்வேறு சாலைகளில் தற்காலிகமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டும் உள்ளது.