தானியங்கி குழந்தைகள் கார்


தானியங்கி குழந்தைகள் கார்
x
தினத்தந்தி 5 July 2017 7:30 PM IST (Updated: 5 July 2017 2:55 PM IST)
t-max-icont-min-icon

குட்டி காரில் விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆனால் ஸ்டீயரிங்கை பிடித்து காரை இயக்கத் தெரியாத சிறு குழந்தைகளுக்கும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் அந்த மகிழ்ச்சியை வழங்கும் வகையில் எளிமையான தானியங்கி காரை உருவாக்கி இருக்கிறார் அமெரிக்கர் சாம் லோகன்.

ஒரிகான் மாகாண பல்கலைக்கழக பேராசியரான இவர் ‘கோ பேபி கோ’ என்ற திட்டத்தில் இந்த காரை உருவாக்கி உள்ளார். ஸ்டீயரிங் உள்ள இடத்தில் இருக்கும் பஞ்சு போன்ற பகுதியில் கை வைத்தாலே கார் மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடும். கையை எடுத்தால் கார் நின்றுவிடும். ரிமோட் காரில் விளையாடும் குழந்தைகளுக்கு நிஜ காரில் பயணிப்பதுபோன்ற அனுபவத்தை தரக்கூடியது இந்தக் கார். விலை 200 அமெரிக்க டாலர்கள்.


Next Story