மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 6 July 2017 2:00 AM IST (Updated: 5 July 2017 6:17 PM IST)
t-max-icont-min-icon

வெம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வெம்பாக்கம்,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வழிகாட்டுதல் பேரில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் நடந்தது.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, உதவி தொடக்க கல்வி அலுவலர் அறிவழகன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) தேன்மொழி வரவேற்றார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜி வாழ்த்தி பேசினார்.

முகாமில் டாக்டர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இதில் 100–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.



Next Story