அவினாசி, பல்லடம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


அவினாசி, பல்லடம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 6 July 2017 3:30 AM IST (Updated: 6 July 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி, பல்லடம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவினாசி,

மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு அவினாசி பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் வீடு,வீடாக சென்று டெங்கு கொசுபுழுக்களை அளிக்கும் மருந்து ஊற்றும் முறை குறித்து விளக்கினார்.

அத்துடன் தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும் என்றும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் பழனிசாமி, அவினாசி பேரூராட்சி அலுவலர் வி.சுப்பாராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, வீடு,வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதார பணியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அத்துடன் தேவராயம்பாளையம், ராக்கியாபாளையம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

அத்துடன், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட கல்லம்பாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கல்லம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுவரும் வளர்ச்சிப்பணிகள், பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் பொதுசேவை மையத்தையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சுகாதாரபணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story