உப்பனாற்று பாலத்திற்கு இணைப்புச்சாலை அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு
சீர்காழி அருகே உப்பனாற்று பாலத்திற்கு இணைப்புச்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழி அருகே சூரக்காடு என்ற இடத்தில் உப்பனாற்று பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் மாற்றுபாதை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ.8 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பாலத்திற்கு இணைப்புச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை நேற்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இணைப்புச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரரை கேட்டு கொண்டார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், உப்பனாற்று பாலத்தின் கட்டுமான பணி 93 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. தற்போது இணைப்புச்சாலை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும் பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி முடிக்கப்பட்டு புதிய பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றார்.
ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மதன்குமார், உதவி கோட்ட பொறியாளர் வடிவேல், தாசில்தார் பிரேமசந்திரன், ஆணையர் சந்தானகிருஷ்ணன், பொறியாளர் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story