நாகர்கோவிலில் தனியார் பள்ளிக்கூடத்தில் 4-வது மாடி சுவர் இடிந்து விழுந்தது
தனியார் பள்ளிக்கூடத்தில் 4-வது மாடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது மாணவ-மாணவிகள் வகுப்பறையில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் திருப்பதி நகரில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. பிரிகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை அந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 20 ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள்.
4 மாடி கட்டிடத்தில் உள்ள இந்த பள்ளிக்கூடம், தெருவில் குடியிருப்புகளின் நடுவே அமைந்துள்ளது. பள்ளி கட்டிடத்தில் 3-வது மாடி வரை மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு 4-வது மாடி கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 4-வது மாடியில் கைப்பிடி சுவர் 5 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் நேற்று மதியம் 3 மணியளவில் வகுப்புகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தன. அப்போது 4-வது மாடியில் புதிதாக கட்டி இருந்த கைப்பிடி சுவர் அடியோடு பெயர்ந்து மொத்தமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வகுப்பறைகளில் இருந்த ஆசிரியைகளும், மாணவ-மாணவிகளும் அலறியடிபடி வெளியே ஓடி வந்தனர்.
இடிந்த சுவரின் ஒரு பகுதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் பள்ளிக்கூடத்தில் திரண்டனர். தகவல் அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கூடத்துக்கு பதற்றத்துடன் ஓடோடி வந்தனர். தங்கள் குழந்தைகளை உடனே அங்கிருந்து வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று கீழே விழுந்து கிடந்த கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தினார்கள். 4-வது மாடி சுவர் இடிந்த போது மாணவ-மாணவிகள் வகுப்பறைகளில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சுவரின் இடிபாடுகள் விழுந்ததில், அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து தரையில் தொங்கின. மின்சாரமும் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து சேதம் அடைந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் மற்றும் கல்வி அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பள்ளிக்கூடத்தில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடையச் செய்தது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் போவதாக கூறி சான்றிதழை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story