துயரத்தால் பந்தாடப்பட்ட சிந்தனையாளன்
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு... பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ‘ட்ரியர்’ நகரம்.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு... பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ‘ட்ரியர்’ நகரம். அங்கு பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவர் ஜான் லுக்வித் வோன் வெஸ்ட்பாலன். பரம்பரை பணக் காரரான இவருக்கும் கரோலின் ஹியூபெலுக்கும் 1814–ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஜென்னி என்று பெயரிட்டனர். அடுத்த நான்காண்டு கழித்து, அதாவது 1818–ம் ஆண்டு அதே நகரில் ஹென்ரிச் மார்க்ஸ்– ப்ரெஸ்பர்க் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் கார்ல் மார்க்ஸ்.
ஜென்னியின் குடும்பமும், கார்ல் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும், ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும், மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அரசியல், சமூகச் சிந்தனைகள், தத்துவம், இலக்கியம் போன்ற பல விஷயங்களை, மார்க்ஸுக்கு வெஸ்ட்பாலன் அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் நிறைய விவாதிப்பார்கள்.
அன்பும், பண்பும், திறமையும் கொண்ட ஜென்னியை, எல்லோருக்குமே பிடித்துப் போகும். மார்க்ஸுக்கும் ஜென்னியைப் பிடித்துப்போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதேபோன்று, மார்க்ஸின் சமூக அக்கறை ஜென்னியையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அவர்களுக்குள் இருந்த அந்த ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களது காதல் கதை ஒரு கட்டத்தில், மார்க்ஸின் தந்தைக்குத் தெரியவர, உண்மையில் அவர் பயந்து தான் போனார். ‘இவர்களின் காதலால் அருமையான நண்பர் வெஸ்ட்பாலனின் நட்பு உடைந்துவிடுமோ’ என்று அவர் நினைத்தார்.
காதலுடன், வழக்கறிஞர் படிப்பையும் தொடர்ந்தார், மார்க்ஸ். படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மார்க்ஸ், சில ஆண்டுகள் காத்திருந்து ஜென்னியை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இணைவதை தடுப்பதற்கு, அப்போது மார்க்ஸின் அப்பாவும், ஜென்னியின் அப்பாவும் உயிரோடு இல்லை.
சமூக அக்கறையும், அரசியல் விழிப்புணர்வும் மார்க்ஸை, அதுதொடர்பான கட்டுரைகளை எழுத வைத்தது. ‘ரைனிஷ் ஷெய்டுங்’ என்ற பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த அவர், ஒரு கட்டத்தில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரானார். இவரது கட்டுரைகள் பிரஷ்யா அரசாங்கத்தை எரிச்சலூட்டியது. கோபமுற்ற அரசாங்கம் அந்தப் பத்திரிகையைத் தடை செய்தது. மார்க்ஸை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது.
அரசாங்கத்தின் நெருக்கடி காரணமாக, மார்க்ஸ் தனது காதல் மனைவியோடு பிரான்சில் குடியேறினார். அங்கு பிரஞ்சு–ஜெர்மன் புத்தகங்கள் தயாரிப்பில் ரூகேவுடன் இணைந்து பணியாற்றினார். அப்போது பிரெடரிக் ஏங்கெல்ஸ் என்பவரது அறிமுகம் கிடைத்தது.
மார்க்ஸின் முதல் பெண் குழந்தை பிறந்த 1844–ம் ஆண்டு, பிரஷ்யா அரசாங்கத்திற்கும், நெசவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனால் நெசவாளர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதினார். கோபம் அடைந்த பிரஷ்ய அரசாங்கம், பிரான்ஸில் இருந்து மார்க்ஸை வெளியேற்றும்படி கட்டாயப்படுத்தியது.
அதைக் கேட்டு பிரான்ஸ் கொடுத்த நெருக்கடியால், பெல்ஜியம் நோக்கிப் புறப்பட்டார் மார்க்ஸ். அங்கிருந்த பிரஸ்ஸல்ஸ் நகரம் மார்க்ஸை வரவேற்றாலும், அரசாங்கத்தை எதிர்த்து எழுத தடை விதித்தனர். இதனால் வருமானம் இன்றி, மார்க்ஸும், அவரது காதல் மனைவியும் கையில் இருந்த பணத்தை மட்டும் செலவழித்து ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்தனர்.
அதற்குள் பிரான்சில் அரசியல் நிலைமை மாறியது. மார்க்ஸ் மீண்டும் பிரான்சிற்கு அழைக்கப்பட்டார். கிளம்புவதற்கு முந்தைய நாள், காரணம் எதுவுமின்றி பெல்ஜியம் அரசால் மார்க்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ‘ஏன்?’ என்று காரணம் கேட்ட ஜென்னிக்கும் சிறைவாசமே மிஞ்சியது. தாயும், தந்தையும் சிறையில் இருந்ததால், அந்த சமயத்தில் அவர்களின் மூன்று பிள்ளைகளும் பரிதவித்துப் போனார்கள்.
இருப்பினும் மறுநாள் காலை விடியல், நல்லவிதமாக விடிந்தது. அந்த காதல் ஜோடிகள் விடுவிக்கப்பட்டனர். வெளியே வந்ததும் கொஞ்சமும் தாமதிக்காமல் பிரான்சிற்கு புறப்பட்டனர். ஆனால் அந்த வாழ்க்கை வெகுநாட்கள் நீடிக்கவில்லை. புரட்சிகரமான கட்டுரைகளை எழுதியதன் காரணமாக, மார்க்ஸ் மீண்டும் அங்கிருந்து துரத்தப்பட்டார்.
இம்முறை அவர் தன் குடும்பத்துடன் குடியேறியது லண்டன் நகரில். கையில் இருந்த பணம் செலவாகிப் போனதால், மார்க்ஸும், ஜென்னியும் வறுமையில் தள்ளாடினார்கள். வாடகை செலுத்த முடியாததால், வீட்டை விட்டு பலமுறை வெளியேற்றப்பட்டனர். அப்போது அவர்களின் ஒரே ஆறுதலாக இருந்தது, அப்போது பிறந்த ஆண் குழந்தை ஹென்ரிச் மட்டுமே. அந்த பிஞ்சுக் குழந்தையின் சிரித்த முகத்தைப் பார்த்து தங்கள் கவலைகளை மறந்தது அந்த தம்பதி.
இதற்கிடையில் பிரஷ்ய அரசாங்கம், மார்க்ஸை வஞ்சம் தீர்க்கத் துடித்துக் கொண்டிருந்தது. மார்க்ஸ் மீதும், அவருடைய தோழர்கள் மீதும் பல பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. குறிப்பாக மார்க்ஸ் மீது ‘கொலோன் கம்யூனிஸ்டு சதி வழக்கு’ போட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக மார்க்ஸ் மிகவும் கஷ்டப்பட்டார். வறுமையாலும், பொய் வழக்குகளாலும் மார்க்ஸ் குடும்பம் உருக்குலைந்து போனது.
போதிய உணவு இன்றியும், சிகிச்சை வசதி இன்றியும் எட்வர்ட், எட்கர் என்ற இருமகன்களும், பிரான்சிஸ்கா என்ற மகளும் அடுத்தடுத்து இறந்து
போனார்கள். இறந்த குழந்தைகளை அடக்கம் செய் வதற்குக்கூட மார்க்ஸிடம் பணம் இல்லை. மார்க்ஸின் நண்பர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் வந்தபிறகே, எட்கர் என்ற மகனை அடக்கம் செய்ய முடிந்தது. மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர்.
ஏங்கெல்ஸ் அழைப்பின் பேரில் மார்க்ஸும், ஜென்னியும் சில காலம் அவர் வீட்டில் தங்கியிருந்தனர். அந்தசமயம் மார்க்ஸ் ‘மூலதனம்’ என்ற புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். அவரது கையெழுத்து மோசமாக இருந்ததால், ஜென்னி ஒவ்வொரு பக்கங்களையும் சளைக்காமல் பல முறை பிரதி எடுத்துக் கொடுத்தார்.
இந்த நிலையில்தான் ஜென்னியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. ஜென்னியும் குழந்தைகளும் அங்கு சென்றனர். பேத்திகளைக் கண்ட ஜென்னியின் அம்மா மகிழ்ந்து போனார். அங்கு சில காலம் தங்கியிருந்தார் ஜென்னி. தாய் இறந்த பிறகு, அவருக்குக் கிடைத்த சொத்துடன் வந்து சேர்ந்தார் ஜென்னி. நண்பர்கள், அகதிகள் போன்றவர்களுக்குத் தேடிப் போய் பண உதவி செய்தார், ஜென்னி. இவர்களது சமூக அக்கறையைக் கண்டு வியந்த நண்பர் ஒருவர், தன்னுடைய சொத்துகளை எல்லாம் மார்க்ஸின் பெயருக்கு எழுதிவைத்தார். அதன்பிறகுதான் ‘மூலதனம்’ நூல் வெளியிடப்பட்டது. மார்க்ஸ் வீட்டிற்கு அருகிலேயே ஏங்கெல்ஸும் குடிவந்தார். ஒருவழியாக வறுமை விலகியிருந்தது. ஆனால் அந்த காதல் தம்பதியரின் வாழ்வில் சோகம் மட்டும் மறையவில்லை.
1880–ம் ஆண்டு ஜென்னிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அது குணமளிக்க முடியாத நோய் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மார்க்ஸ் இடிந்துபோனார். ஜென்னியின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். தன் பொருட்டு தன் கணவரோ, குழந்தைகளோ வருத்தப்படக்கூடாது என்று நினைத்த ஜென்னி, தன் நோயின் வலியை மறைத்துக் கொண்டு, நகைச்சுவையாகப் பேசினார்.
மனதால் இணைந்திருந்த தம்பதி, நோயாலும் இணைந்தது. ஆம்! விரைவிலேயே மார்க்ஸும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டார். தனியறையில் வைக்கப்பட்டார். பல வாரங்கள் ஜென்னியும், மார்க்ஸும் ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. துன்ப வேளையிலும் கூட ஒன்றாக இருந்தவர்களை, விதி நோய் வடிவில் வந்து பிரித்து வைத்தது. இருவரும் அடுத்தடுத்த அறைகளில் வைத்து பராமரிக்கப்பட்டதால், பார்த்துக் கொள்ளாமல் பேசிக்கொண்டனர்.
ஒருவழியாக மார்க்ஸிற்கு ஓரளவு நோய் குணமானதும் ஜென்னியிடம் வந்தார். ஆனால் இவர் களது சந்திப்பு வெகுகாலம் தொடரவில்லை. 1881–ம் ஆண்டு ஜென்னி இறந்துபோனார். இந்த செய்தி மார்க்ஸின் சுயநினைவை இழக்கச் செய்தது. காதல் மனைவியின் இழப்பு, அவரையே இழக்கும்படி செய்துவிட்டது. 15 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் ஜென்னியின் புகைப்படத்தை கையில் வைத்தபடி, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவர், அப்படியே அமரராகிப்போனார்.
ஜென்னி நினைத்தது போலவே மார்க்ஸ் உலகம் முழுவதும் அறியப்பட்டார். மார்க்ஸின் சிந்தனையால் உலகம் பல மாற்றங்களைக் கண்டது.
பிபிசி நிறுவனம் சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் ‘கடந்த ஆயிரம் ஆண்டில் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?’ என்ற கேள்விக்கு, காலமெல்லாம் தன் சிந்தனை எழுத்தின் காரணமாக பந்தாடப்பட்ட கார்ல் மார்க்ஸை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், உலக மக்கள்.

Related Tags :
Next Story