கோவில்பட்டியில் கடலைமிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கடையடைப்பு
சரக்கு, சேவை வரியைக் கண்டித்து, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
சரக்கு, சேவை வரியைக் கண்டித்து, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரக்கு, சேவை வரியைக் கண்டித்து...கோவில்பட்டி பகுதிகளில் அச்சுவெல்லம், கடலைமிட்டாய் ஆகியவற்றைக் கொண்டு, குடிசை தொழிலாக உற்பத்தி செய்யப்படும் கடலைமிட்டாய் பிரசித்தி பெற்றது. இதுநாள் வரையிலும் கடலைமிட்டாய்க்கு வரி விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 1–ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட சரக்கு, சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) ஏழைகளின் எளிய சத்துணவான கடலைமிட்டாய்க்கு 18 சதவீதமும், பணக்காரர்களின் பீட்சா உள்ளிட்ட உணவுகளுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, சரக்கு, சேவை வரியைக் கண்டித்தும், கடலைமிட்டாய்க்கு வரிவிலக்கு வழங்க வலியுறுத்தியும், கோவில்பட்டியில் கடலைமிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டியில் உள்ள 80–க்கு மேற்பட்ட கடலைமிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களின் கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டம்தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கடலைமிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சேதுரத்தினம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கரன், மாநில துணை தலைவர் ராஜா, சிறிய உணவுப்பொருள் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துராஜா, செயலாளர் மோகன்ராஜா, சீனிவாசன், கார்த்தீசுவரன், ஜமீன்தேவர்குளம் கண்ணன், பெருமாள்சாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.