மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே லாரி மோதி ரெயில்வே கேட் சேதம்
மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே லாரி ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் ரெயில்வே கேட் சேதம் அடைந்தது. சிக்னல்கள் பாதிப்பு அடைந்தன.
மீஞ்சூர்,
மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக மீஞ்சூரில் இருந்து காட்டூருக்கு ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று காலை அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த லாரி ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் ரெயில்வே கேட் சேதம் அடைந்தது. சிக்னல்கள் பாதிப்பு அடைந்தன.
ரெயில்வே கேட் சேதம் அடைந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன. சிக்னல்கள் பாதிப்புக்கு உள்ளானதால் ரெயில் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளானது.
தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரெயில்வே கேட்டை சீரமைத்தனர். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.
கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில்வே கேட்டை சேதப்படுத்திய லாரி டிரைவரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த முனுசாமி (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story