வேலை இழந்த பணியாளர்களுக்கு பணி டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் பேட்டி


வேலை இழந்த பணியாளர்களுக்கு பணி  டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 7 July 2017 4:15 AM IST (Updated: 7 July 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாற்றுப்பணி-அரசு பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நடந்தது.

காஞ்சீபுரம், 

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாற்றுப்பணி-அரசு பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட அமைப்பு கூட்டம் காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் என்.டில்லிபாபு, சிவக்குமார், நிர்மல்குமார், பாலாஜி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். பின்னர் மாநில தலைவர் பால்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளை மூடும்போது பணியிழக்கும் பணியாளர்களுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணி மூப்பு, கல்வித்தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகளில் 3 லட்சம் காலியிடங்கள் உள்ளன.

தமிழக அரசு கல்வி தகுதிக்கேற்ப வேலையிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசாணை பிறப்பித்து பணி வழங்கவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வரும் 10-ந் தேதி சங்க நிர்வாகிகள் மூலம் கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story