விராரில் ஆங்கிலேயர் காலத்து பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு


விராரில் ஆங்கிலேயர் காலத்து பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 7 July 2017 4:00 AM IST (Updated: 7 July 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

விராரில், ஆங்கிலேயர் காலத்து பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வசாய்,

விராரில், ஆங்கிலேயர் காலத்து பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பீரங்கி குண்டுகள்

பால்கர் மாவட்டம் விரார் சக்வார் பகுதியில் டகம்காத் கோட்டை உள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்ட போது இந்த கோட்டையை பதுங்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த கோட்டை பராமரிப்பு இன்றி குப்பைகள் மண்டி கிடந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று தன்னார்வலர்கள் 11 பேர் அந்த கோட்டையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். அப்போது கோட்டையில் இரும்பாலான மூன்று குண்டுகள் தனித்தனியாக கிடந்ததை பார்த்தனர். அவற்றை எடுத்து பார்த்த போது பீரங்கி குண்டுகள் என்பது தெரியவந்தது.

2½ கிலோ எடை கொண்டவை

உடனே இதுபற்றி அவர்கள் கோட்டை பாதுகாவலர் டாக்டர் ஸ்ரீதத்தா ராவுத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் அங்கு வந்து அந்த பீரங்கி குண்டுகளை பார்வையிட்டார். அவை ஒவ்வொன்றும் 2 முதல் 2½ கிலோ எடை கொண்டதாக இருந்தன.

இதுபற்றி டாக்டர் ஸ்ரீதத்தா ராவுத் கூறுகையில், ‘‘ பீரங்கி குண்டுகள் 1860–ம் ஆண்டில் டம்காத் கோட்டையை தாக்க பயன்படுத்தப்பட்டவை ’’ என்றார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.


Next Story