வளசரவாக்கத்தில் நடந்த தீ விபத்து ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


வளசரவாக்கத்தில் நடந்த தீ விபத்து ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 7 July 2017 5:30 AM IST (Updated: 7 July 2017 4:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வளசரவாக்கத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

பூந்தமல்லி, 

சென்னை வளசரவாக்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் அசோக் குமார் என்பவருக்கு சொந்தமான டீக்கடை, பேன்சிகடை உள்ளிட்ட 4 கடைகள் உள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு பேன்சி கடையில் தீப்பிடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவியதால் 4 கடைகளும் எரிய தொடங்கியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற ராமாவரம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை அணைக்க முடியாததால் கூடுதலாக கோயம்பேடு, வானகரம், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அந்த கடைகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரம் என்பதால் கடைகள் மூடியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. 

Next Story