மாயமான மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார் கொலையா? போலீசார் விசாரணை


மாயமான மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 July 2017 4:15 AM IST (Updated: 8 July 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மாயமான மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த முதுகூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் மோகனா (வயது 13). மணவாளநகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5–ந் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மோகனா வீடு திரும்பவில்லை. 

இது குறித்து அவரது தந்தை மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கடத்தி கொலையா?

 இந்த நிலையில் அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் மோகனா பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் மோகனாவின் உடலை மீட்டு பிரேத பரிசேதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மோகனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை மர்மநபர்கள் யாரேனும் கடத்தி சென்று கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story